தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வர் பயன் தெரிவார் (குறள் 104)
திருவள்ளுவர் தாத்தா பாடி வெச்சிருக்காரு. அதாவது, ஒருத்தர் செய்யுற தினையளவு நன்மை கூட, நன்றியுள்ள மனுஷனுக்கு பனை அளவுக்குத் தெரியும்ங்கிறதுதான், இந்த பாட்டோட அர்த்தம். பனை மரம் தர்ற பலன்களை அனுபவிச்சு தெரிஞ்சுக்கிட்டதால, அதை குறள்ல நல்லாவே பயன்படுத்தியிருக்கார் திருவள்ளுவர். ஆனா, நாம, அற்புதமான இந்த பனைமரங்களை, அதனுடைய ஆயுள் முடியறதுக்கு முன்னயே வெட்டி வெட்டி, செங்கல் சூளைக்கு அனுப்பிக்கிட்டிருக்கோம்.
ஒரு பனை மரத்தில இருந்து, ஒரு வருஷத்துக்கு பதநீர்-180 லிட்டர், பனை வெல்லம் – 25 கிலோ, பனஞ்சீனி – 16 கிலோ, தும்பு (மிதியடி, பிரஸ் தயாரிக்கப் பயன்படுகிறது) – 11.4 கிலோ, ஈக்கு – 2.25 கிலோ, விறகு – 10, கிலோ, ஓலை – 10 கிலோ, நார் – 20 கிலோ…. அளவுக்குக் கிடைக்குதுனு விஞ்ஞானிங்க பட்டியல் போட்டு சொல்லியிருக்காங்க. தென்னை மரத்தோட ஒப்பிட்டா, பனை மரத்துலதான் நிறைய பலன் உண்டு. ஆனா, தென்னை மரத்தைக் கொண்டாடுற மாதிரி, பனை மரத்தை நாம கொண்டாடுறதில்ல. நம்மளோட தயவு இல்லாமலே, மகசூல் கொடுக்கிற பனை மரத்துக்கு இனிமேலாவது நன்றி சொல்வோம்.
வெள்ளைக்காரன் நம்ம மண்ணுல காலடி வெச்சதிலிருந்துதான் பனைக்கு நேரம் சரியில்லாமா போயிடுச்சு. வெள்ளைக்காரன்தான், பனை மரம் ஏறி பதநீர் இறக்கிறவங்களுக்கு லைசென்ஸ் முறையைக் கொண்டு வந்தான். ஏன்னா, வெளிநாட்டு கம்பெனி பீருக்கும், பிராந்திக்கும் போட்டியா இருந்தது, கள்ளும், பதநீரும்தான். அடுத்து, தமிழ் மக்களோட உணவுல பனங்கருப்பட்டிக்கு (பனைவெல்லம்) தனியிடம் இருந்துச்சு. இதை ஒழிச்சுகட்டிப்புட்டு, வெள்ளைச் சர்க்கரையைக் கொண்டு வர திட்டம்போட்டான். கறுப்பா இருக்கிற பனங்கருப்பட்டியை விட, வெள்ளையா இருக்கிற சர்க்கரை சாப்பிடறதுதான் நல்லதுனு பொய்ப்பிரசாரம் வேற நடந்திருக்கு. கூடவே, நம்ம தமிழ் மக்களோட வெள்ளை நிற மோகம், பனங்கருப்பட்டியைத் தூக்கி எரிய வெச்சிடுச்சு.
‘‘கரும்பைக் காட்டிலும், பனை மரம்தான் சிறந்தது. ‘பணப்பயிர் கரும்பு’ என்று சொல்பவர்களை நம்ப வேண்டாம். கிராம மக்களுக்கு ஏற்றது கருப்பட்டிதான்’’னு காந்தியப் பொருளாதார மேதை ஜே.சி.குமரப்பா, இந்தியா சுதந்தரம் வாங்கின உடனே, குரல் கொடுத்தாரு. ஆனா, அது ஏற வேண்டியவங்க காதுல ஏறவே இல்ல. இதோட, பலாபலனை இப்போ அனுபவிக்கத் தொடங்கிட்டோம்.
‘‘பனங்கருப்பட்டியும், பனங்கற்கண்டும் சாப்பிட்டால் வாத பித்தம் நீங்கும். பசியைத் தூண்டும். புஷ்டி தரும்…’’னு ஆயுர்வேத மருத்துவம் சொல்லுது.
பனங்கற்கண்டை, பசும்பால்ல காய்ச்சி குடிச்சவங்களுக்குத்தான், அந்த ருசியோட அருமை தெரியும். தொண்டைப் புண், வலி மற்றும் சளி பிரச்னைக்கு பனங்கற்கண்டுப் பால் கண் கண்ட மருந்து. புகழ்பெற்ற பேச்சாளர்களும், இனிய குரல் வளமுள்ள பாடகர்களும் பனங்கற்கண்டுப் பாலைக் குடிக்காம, மேடை ஏற மாட்டாங்க. இனிமையான குரலுக்கும், கம்பீரமான பேச்சுக்கும் அடித்தளம் போட்டுக் கொடுக்கிற சக்தி பனங்கற்கண்டுல இருக்கு.
பனங்கருப்பட்டியை மறந்து, நாம எவ்வளவு தூரம் வந்தோமோ, அந்த அளவுக்கு அதைத் தேடி ஓட வேண்டிய சூழ்நிலை உருவாகியிருக்கு.
சீனி உடலுக்கு எந்த சத்தையும் கொடுக்காமல், உடம்பிலுள்ள சத்தையும் ஈர்த்துக் கொள்கிறது. அதனால்தான் இது சத்தில்லாத கலோரி, சத்தில்லாத உணவு என்றும் அழைக்கப்படுகிறது.
சிகரெட், மது முதலியவற்றைவிட சீனி அதிக ஆபத்தானது என்று சொல்லலாம். என்ன மது, புகையிலை மாதிரி இல்லாம கண்ணுக்கே தெரியாம கொள்ளும் சீனி.
புற்றுநோய், எலும்பு முறிவு நோய், மூட்டு வியாதிகள், உடல் பருமன், இதய நோய்கள், இரத்த அழுத்தம், சருமநோய்கள், விரைவில் முதிர்ச்சி, முதுமை, பித்தக்கல், ஈரல்நோய், சிறுநீரகக்கோளாறு, சொத்தைப்பல், பெண்ணுறுப்பு தொற்றுநோய், அளவுக்கு மீறிய சுறுசுறுப்பு, வன்செயல் மற்றும் பரவலாக இருக்கும் நீரழிவு நோய், இப்படி சீனி உடம்பிலுள்ள ஒவ்வொரு உறுப்பையும் பாதிப்புக்கு உள்ளாக்குகிறது. டின் பானங்கள், செயற்கை சத்துணவுகளை
சாப்பிட்டா நாம சீக்கிரம் டின் /மண்ணுக்குள்ள போக வேன்டியதுதா.
உங்கள் குழந்தைக்கு குளிர்பானம், ஐஸ்கிரீம், சாக்லேட் மற்றும் அளவுக்கு அதிகமான சீனி உள்ள உணவுகளைக் சிறு வயது முதலே கொடுப்பதன் மூலம் உங்கள் குழந்தையை நீங்களே நோயாளியாக உருவாக்குகிறீர்கள் என்று அர்த்தம். இனிப்பான பொருளை உண்ணும்போது வாயில் உள்ள பாக்டீரியாக்கள் அதனுடன் சேர்ந்து அமிலத்தை உருவாக்குகிறது. இந்த அமிலம் பிறகு பற்களில் உள்ள எனாமலை அரித்து ஓட்டையாக்கி பல் சொத்தையை உண்டாக்குகிறது. தினமும் 24 தேக்கரண்டி சீனி நமது உணவில் சேர்ந்தால் இது 92 சதவிகித வெள்ளை இரத்த அணுக்கள் உருவாவதை தடுக்கிறது. இந்த வெள்ளை அணுக்கள் அபாயகரமான பாக்டீரியாக்களை எதிர்க்கும் தன்மை உடையவை.
சீனி உட்கொள்வோரின் உடலில் தேங்கி இருக்கும் அமில கழிவுகள் (சீனி தயாரிப்பில் பயன்படுத்தப்படும் விஷ அமிலங்கள் சல்பர் டை ஆக்சைடு (விஷம்)- இங்கே காணலாம்), இந்த வேதிப்பொருட்கள் ஒவ்வொன்றையும், அதன் இயல்புத்தன்மையையும், அது ஆரோக்கியத்தை எப்படியெல்லாம் கெடுக்கும் என்பதையும் ஒரு தனிபதிவே எழுதலாம். அதை சர்க்கரை ஆலைகள் பயன்படுத்தும் விதத்தை நோக்கினால், இது குழந்தை முதல் முதியவர் வரை பயன்படுத்துவது என்ற பிரக்ஞையே இல்லாமல் ஈவிரக்கமின்றி செய்கிறார்களே என்று மனம் பதறும். ஆனால் மெத்தப்படித்த மேதாவிகளும் அப்படி வரும் சீனியை ருசித்து பருகுவதுடன் தன் குழந்தைகளுக்கும் கொடுப்பதுதான் மகா கொடுமை!. மேற்சொன்ன வேதிப்போருதகளையும், அமிலங்களையும் உடலின் இருந்து சுத்தப்படுத்த அதிகமான இன்சுலின் வெளியாக்கப்படுகிறது. அளவுக்கு அதிகமாக வெளியாகும் இன்சுலினுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியைத் தடுக்கும் ஹார்மோன்களான புரோஸ்டேகிளேன்டின் வுக்கும் அதிக தொடர்பு இருக்கிறது. இது புற்றுநோய் கழலையை உருவாக்குகிறது.
சர்க்கரை சுத்த அசைவம் என்பது – மற்றொரு மறைக்கப்பட்ட உண்மை. சர்க்கரையை வெள்ளையாக்க, மாட்டெலும்பு பயன்படுத்தப்படுகிறது. Bone Char எனப்படும் எரிக்கப்பட்ட மாட்டெலும்பு பில்டராக பயன்படுகிறது. சர்க்கரையில் சேர்க்கவேண்டிய கால்சியதுக்கு-கார்பனுக்கு மாற்றாக மாட்டெலும்பு பொடி பல சர்க்கரை ஆலைகளில் சேர்க்கப்படுகிறது. ஆக , இனி சர்க்கரை கொண்டு செய்யப்படும் இனிப்பு பலகாரங்கள், உணவு எதுவும் சைவ உணவுப் பழக்கமுடையவர்கள் பயன்படுத்தக் கூடாது. கோயிலில் வெள்ளை சர்க்கரை கொண்டு செய்யப்பட்ட பொருட்கள் உள்ளேயே விடக்கூடாது. வெள்ளை சர்க்கரை உண்டவர்கள் கோயிலுக்கு செல்லவே கூடாது. நோயை கொடுக்கும் சீனி கொண்டு பலகாரம் செய்து, கோவிலில் பிரசாதம் என்று கொடுத்து பாவத்தை சேர்த்துக்கொள்ள வேண்டாமே! நம்ம ஊர் கோவில்களில் சர்க்கரை பொங்கல் – என்று கொடுக்கப்பட்டவை வெல்லம் போட்டு செய்தவையே.
கற்பக விருட்சம் என்று சொல்லி மாநில மரம் நு சொல்றது பேருக்கு மட்டும் தான், நிஜத்தில் பனைமரங்களை நமது அரசே கொன்று குவிக்கிறது. இப்படியே பணியை அருங்காட்சியகத்தில் மட்டும் பார்க்கும் காலம் வெகுதூரம் இல்லை. கரும்பை விட எட்டு மடங்கு சர்க்கரையை கொடுக்கும் பனை மரத்தை எப்படி காப்பது என்று நமது அன்பர்களிடமிருந்து கற்போம்.
தாதுப் பொருட்கள் மிகுந்து இருக்கும் வெல்லulம், பனை வெல்லம் & தேன் போன்றவற்றை நல்லவை என்று மூளைக்கு தெரிந்தாலும், சுவை கெட்டுப்போன மனிதனின் நாக்கு ஏற்க மறுக்கிறது. சுவையற்ற வெள்ளைச்சீனியே சுவை மிக்கது என்கிறது பாழாய்ப்போன மனித மணம் . சீனி உள்ள உணவுகளைக் சிறு வயது முதலே கொடுப்பதன் மூலம் உங்கள் குழந்தையை நீங்களே நோயாளியாக உருவாக்குவது மட்டுமல்லாமல் ஒரு வலுவற்ற எதிர்கால சந்ததியினர் & சுற்றுப்புற சூழல் உருவாக அடித்தளம் இடுகிறீர்கள் என்று உணருங்கள். நான் ஒருத்தர் நிறுத்திட்டா எல்லாம் சரியாகிடுமா? என்று தோன்றுகிறதா! வாங்குவதற்கு ஆள் இல்லையேல் சீனி விற்பவன் ஏது ? நாட்டையும் வீட்டையும் வளமாகவும், நோயற்ற சமூகத்தையும் சுற்றுப்புறத்தையும் உருவாக்க உறுதிகொள்வதோடு நின்றிடாமல் செயல்படுதுக்கள், முடிந்தால் நீங்கள் விரும்பும் சொந்தங்களுக்கும் எடுத்து சொல்லுங்கள். அடுத்த தலைமுறையை இயற்கையிலேயே நோயுடைய தலைமுறையாக்கும் சீனியை உங்கள் வீடுளிருந்து அகற்றுங்கள்.
சீனி விலை கம்மி, பனை வெல்லம், வெல்லம் & தேன் விலை அதிகம் நு சொல்லிட்டு, மருத்துவமனைகளில் புரியாத நோய்களுக்கு தெரியாத ஆள் கிட்ட வைத்தியம் பார்க்க, வரிசையில் உட்கார்ந்து காசை செலவழிக்க வேண்டி வரும். வாழ்க வளமுடன்.
சீனி பற்றிய அப்பட்டமான உண்மைகளை John Yudkin (8 August 1910 – 12 July 1995) was a British physiologist and nutritionist தன்னுனைய Pure White and Deadly புத்தகத்தில்… free pdf
Dr. Robert Lustig – Fat Chance: The bitter truth about sugar – / youtube காணொளி